Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை , 25 ஜூன் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை, வயது 45. இவர் நேற்று இரவு தனது வீட்டின் வாசலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பனார்கோயில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தங்கதுரை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தங்கதுரையை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் வீட்டு வாசலிலேயே ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b