பராமரிப்பு பணி காரணமாக சென்னை - அரக்கோணம் மின்சார ரயில்கள் ரத்து - ரயில்வே அறிவிப்பு
சென்னை, 25 ஜூன் (ஹி.ச.) சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 27 மற்றும் ஜூன் 28 ஆகிய இரு தேதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது. ரயில்வே வெளியிட்டுள
பராமரிப்பு பணி காரணமாக சென்னை - அரக்கோணம் மின்சார ரயில்கள் ரத்து - பயணிகள் அவதி


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 27 மற்றும் ஜூன் 28 ஆகிய இரு தேதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி,

அரக்கோணம் ரயில்வே பணிமனையில், வரும் 27, 28ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் - வேலுார், காலை 7:20 மணி: அரக்கோணம் - திருச்சானுார், காலை 9:15 மணி, சென்ட்ரல் - அரக்கோணம் இரவு 7:10 மணி, திருச்சானுார் சென்ட்ரல், மதியம் 1:30 மணி, ஆவடி-சென்ட்ரல், மாலை 6:10 மணி, அரக்கோணம் - திருத்தணி, காலை 5:00 மற்றும் 6:25 மணி, சென்ட்ரல் அரக்கோணம், காலை 7:00 மற்றும் 9:50 மணி உட்பட, 27 மின்சார ரயில்களின் சேவை, வரும் 27ம் தேதியில் ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் - வேலுார், காலை 7:20 மணி, மதியம் 2:50 மணி, அரக்கோணம் - திருப்பதி, காலை 9:15 மணி, கடற்கரை - திருவண்ணாமலை, மாலை 6:00 மணி, திருவண்ணாமலை தாம்பரம், காலை 4:30 மணி; திருச்சானுார் சென்ட்ரல், மதியம் 1:30 மணி, சென்ட்ரல் - அரக்கோணம், காலை 7:00 மணி, சென்ட்ரல்-திருச்சானுார், காலை 9:50 மணி, அரக்கோணம் கடற்கரை, காலை 7:00 ம ற்றும் 9:50 மணி: அரக்கோணம் - கடற்கரை, காலை 6:50 உட்பட, 22 மி ன்சார ரயில்களின் சேவை, வரும் 28ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் ரத்துகளால் தினசரி அலுவலகம், கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கமான ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b