Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக மூத்த நிர்வாகி
ஏ.வா. வேலுவின் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக, அவரை நேரில் சந்தித்துவிட்டு வெளியே வந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல் என்பார்கள்.
ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பழிவாங்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதற்குப் பிறகே இந்த சோதனைகள் நடைபெறுகின்றன என்று குற்றம்சாட்டினார்.
மேலும், இதுபோன்ற சோதனைகளை நாங்கள் பலமுறை சந்தித்துள்ளோம். இவற்றைப் பார்த்து அலுத்துப்போய்விட்டோம்.
ஏ.வா. வேலுவின் வீட்டுக்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளில் சிலருக்கு பின்னர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுபோன்ற கேவலமான அரசியல் நடவடிக்கைகளை திமுக ஒருபோதும் மேற்கொள்ளாது என்றார்.
தொடர்ந்து, இந்த சோதனைகளை நாங்கள் சவாலாகவே எடுத்துக்கொள்கிறோம். 1977-ஆம் ஆண்டு முதல் எங்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டன.
ஆனால் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எங்கள் தலைவர் கூறியபடி, அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து தூள் தூளாக்குவோம் என்று தெரிவித்தார்.
மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் சோதனை நடைபெற்ற போதும் நான் உடன் இருந்தேன்.
அப்போது என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று கூறிய அவர், தனது பேச்சை ஆங்கிலத்தில்
It's all in the game என முடித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam