Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 25 ஜூன் (ஹி.ச.)
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சர், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் சரவணன், கூட்டத்தில் பங்கேற்ற துறை சார்ந்த அதிகாரிகளை அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி வைத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள், நலத்திட்ட செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசுத் திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் திட்டங்கள் மக்களிடம் விரைவாகவும் முழுமையாகவும் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் கே.பி. அன்பழகன், கஜேந்திரன், மரகதம் வெற்றிவேல் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்ட வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN