Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜூன் (ஹி.ச)
உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள், அவதூறுகள் மற்றும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் என்று திமுகவை கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், திகார் சிறையில் திமுகவின் ஊழல் மற்றும் திருட்டுக் கொள்கைகளை வளர்த்தவர்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.
உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள், அவதூறுகள் மற்றும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும்,அவதூறு அரசியலை முன்னெடுத்து வரும் திமுகவின் வீழ்ச்சிக் காலத்தை, அக்கட்சியின் தலைவர்களும் நிர்வாகிகளுமே தொடங்கி வைத்துள்ளனர்.
மக்களின் ஆதரவை இழந்து வரும் நிலையில், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அவதூறுகளையே திமுக ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது என்றும் தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ