Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
விஸ்வநாத் பிரதாப் சிங்
(வி.பி. சிங்) இந்தியாவின்
7-ஆவது பிரதமராகப் பணியாற்றிய ஒரு மிக முக்கிய அரசியல் தலைவர் ஆவார்.
மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இடஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் இந்திய வரலாற்றில் சமூக நீதிக் காவலர் என்று இவர் போற்றப்படுகிறார்.
ஜூன் 25, 1931 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார். அலகாபாத் மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் சட்டம் மற்றும் அறிவியல் பட்டங்களைப் பெற்ற இவர் தனது இளம் வயதிலேயே பூமிதான இயக்கத்தில் பங்கேற்றார்.
1969-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தனது அயராத உழைப்பால் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார்.
அந்த வகையில் இன்று முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம்.
சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b