என் மீது அவதூறு பரப்பும் தவெக ஐ.டி.விங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
அரியலூர், 25 ஜூன் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று முன்னால் அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் அவர் தெரிவிக்கையில், மு
SS Sivasankar


அரியலூர், 25 ஜூன் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்று முன்னால் அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் அவர் தெரிவிக்கையில்,

முன்னால் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் அமைச்சரின் உதவியாளர் என்று செய்தி வருவது பொய்யான செய்தி ஆகும்.

எனக்கும் இளஞ்செழியன் என்பவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு த.வெ.க ஐடி விங் அவதூறு பரப்பி வருகின்றனர். அது போன்று செயல்படுபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடுகிறது. அதற்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மிசாவை பார்த்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

இது போன்ற சோதனைக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

சட்டமன்றத்தில் முதல்வர் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்: நக்கல் செய்வது நையாண்டி செய்வது எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்ற பட்டியலை பார்த்து முதல்வர் அறிந்து கொள்ள வேண்டும்.

மின்சாரத்துறை சம்பந்தமான வெள்ள அறிக்கை என்பது ஏற்கனவே அறிவித்த வெற்று காகித அறிக்கையாகத்தான் இதுவும் இருக்கும்.

அரசு பேருந்து வாங்குவதாக இருந்த திட்டத்தை நிறுத்திவிட்டு, அதில் ஏதோ குற்றம் இருப்பது போல் தோற்றத்தை உருவாக்கினார்கள் அதில் உண்மையான செய்தி என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN