Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.
தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை நேற்று முன் தினம் நேற்று என தொடர்ச்சியாக 2 நாட்களும் அதிரடியாக சரிந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.105,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230க்கும், ஒரு கிலோ ரூ.2,30,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P