Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 ஜூன் (ஹி.ச.)
மதுரையில் நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மயக்கமடைந்த மாணவிகளுக்கு முதலுதவி செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவ - மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரம் ஓடிய நிலையில், கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலும், ஒரு பெண்ணின் தகப்பன் என்ற உணர்வுடனும் முதலுதவி செய்ததாக கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ள சில செய்திகள் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், தனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படுவது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அணுகுமுறை ஏதோ ஒரு வகையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், அதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் பெ. விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P