Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஜூன் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கான முதற்கட்ட ஏற்பாடாக, முகூர்த்தக்கால் நடும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த மாபெரும் குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு, இன்று காலை 11 மணியளவில் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவின் தொடக்கமாகக் கருதப்படும் இந்த முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில், கோயில் அர்ச்சகர்கள், ஸ்தானிகர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க கால் நடும் பணியை மேற்கொள்வர்.
கடைசியாக 2009-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த திருப்பணி விழாவைக் காண பக்தர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
குடமுழுக்கை முன்னிட்டு கோயில் முழுவதும் திருப்பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b