Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 25 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றிய 569 கிலோ கஞ்சாவும், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 419 கிலோ கஞ்சாவும் சேர்த்து மொத்தம் 988 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் எரியூட்டு மையத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் சாஸ்திரி மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஐஜி அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மூட்டைகளின் எடை சரிபார்க்கப்பட்டது.
பின்னர் நீதிமன்ற
உத்தரவின்படி, பொத்தையடியில் உள்ள அஸ்பெக்டிக் சிஸ்டம் எரியூட்டு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கஞ்சா தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam