வெனிசுலா நிலநடுக்கம் 32 பேர் பலி,700 பேர் காயம் – இந்தியா உதவிக்கரம் பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி, 25 ஜூன் (ஹி.ச.) வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக
A


புதுடெல்லி, 25 ஜூன் (ஹி.ச.)

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன்,

700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மொரோன் நகரம் மற்றும் தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதுடன், பல வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்தன. பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் திரண்டனர்.

இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெனிசுலா பொறுப்பு ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது,

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த பேரிடருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில்,

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கச் சேதங்கள் குறித்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, வெனிசுலாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவின் இந்த உதவித் தயார் நிலை, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA