மசினகுடி அருகே நாயை விரட்டிச் சென்ற சிறுத்தை வீட்டில் சிக்கியது..!
நீலகிரி, 25 ஜூன் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள மாயார் செல்வப்பா காலனி குடியிருப்பு மாயார் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டிற்கு நாயை வேட்டையாடும் நோக்கில் சிறுத்தை நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த வீட்டின் உரிமைய
சிறுத்தை


நீலகிரி, 25 ஜூன் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள மாயார் செல்வப்பா காலனி குடியிருப்பு

மாயார் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டிற்கு நாயை வேட்டையாடும் நோக்கில் சிறுத்தை நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த வீட்டின் உரிமையாளர், சிறுத்தை வீட்டிற்குள் இருந்தபோதே கதவை வெளியே இருந்து பூட்டி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், சிறுத்தையை பாதுகாப்பாக பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீட்டிற்குள் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வனப்பகுதியை ஒட்டியுள்ள மாயார் மற்றும் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Hindusthan Samachar / GOKILA arumugam