பழனியில் வருவாய் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனுக்கள் பெற்ற அமைச்சர்
திண்டுக்கல், 25 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் மனுக்கள் அளிப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் துர்கா ம
Vignesh


திண்டுக்கல், 25 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் மனுக்கள் அளிப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் துர்கா மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டனர். அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருட்டிலேயே பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

மேலும் அமைச்சருடன் தவெக நிர்வாகிகள் பலரும் சூழ்ந்து கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமித்ததால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

காலை முதல் மனு கொடுக்க வந்து காத்திருந்த பலரும் அதிருப்தி அடைந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN