புளியரை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
தென்காசி, 25 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அமைந்துள்ள போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். புளியரை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக எ
புளியரை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை


தென்காசி, 25 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அமைந்துள்ள போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.

புளியரை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு, அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டது.

அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கேரள எல்லையில் உள்ள முக்கிய சோதனைச் சாவடியான புளியரையில் நடந்துள்ள இந்த சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b