பாலியல் சீண்டல் புகார் - தலைமறைவாக இருந்த தவெக தொழிற்சங்க நிர்வாகி கைது
தேனி, 25 ஜூன் (ஹி.ச.) தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சாஜிதா பானு (43), தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவர் உயிரிழந்த நிலையில், தனியார் ரெடிமேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படும் தம
கைது


தேனி, 25 ஜூன் (ஹி.ச.)

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சாஜிதா பானு (43), தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவர் உயிரிழந்த நிலையில், தனியார் ரெடிமேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அதே பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படும் தமிழக வெற்றி கழக (தவெக) தொழிற்சங்க நிர்வாகி மற்றும் ஆட்டோ ஓட்டுநரான பாபு என்கிற ஆசிக் பாபு (38), சாஜிதா பானுவை குறிவைத்து தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் வேலைக்குச் செல்லும் போது ஆபாசமாக பேசியும், ஆபாச சைகைகள் செய்தும் தொந்தரவு அளித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாஜிதா பானு அளித்த புகாரின் அடிப்படையில் கம்பம் தெற்கு காவல்துறையினர் ஆசிக் பாபு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆசிக் பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை தேடி வந்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஆசிக் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஆசிக் பாபு பல பெண்களுடன் பழகி வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆசிக் பாபுவிடம் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam