Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெறும் போது மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு வர கால தாமதம் ஆனதால், விவசாயிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த சம்பவத்தை தவிர்க்கும் வகையில் இன்று இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் சரியாக 11 மணிக்கு ஆரம்பித்தது. கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் ஆட்சியில் அலுவலக கூட்டணியில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது வன உயிரின பாதிப்பால் மரணமடைந்த குடும்பத்தினரான
நாராணபுரத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள், பனையங்குறிச்சியை சேர்ந்த சீதாபதி, மேல கடையநல்லூரை சேர்ந்த மாரிசெல்வி, கீழ ஆம்புரை சேர்ந்த ஆறுமுக வடிவு ஆகிய 4 குடும்பத்தினருக்கு தலா ரூ10 லட்சம் வீதம் நான்கு நபர்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவசாய இடு பொருட்கள், சிறப்பாக விவசாய பணிகள் கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், தான் தேனி, நாகை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளதாகவும், விவசாயிகள் குறித்த பிரச்சினைகளை அறிந்துள்ளதாகவும் பேசினார். இங்கேயும் அதே போல் சில பிரச்சனைகள் உள்ளது.
அதனை பேசி தீர்வு காண்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இங்கு, சங்கங்கள் மூலமாகவும் தனிநபராகவும் அதிகமான விவசாயிகள் வருகை தருவதால் அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்க வேண்டும்.
மாதம்தோறும் 11 மணிக்கு நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் காலங்களில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இனி 10:30 மணி அளவில் சரியாக கூட்டம் தொடங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியரோ அதிகாரிகளோ அனைவரும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பணியாற்றுகின்றனர்.
அதிகாரிகளுக்கும் விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேபோல் விவசாயிகள் அதிகாரி பார்க்கச் சென்றால் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை என்றாலோ, அலுவலகம் அடைத்து இருந்தாலோ அதற்கு உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.
கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகளுக்கும் அவரது கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும், சரியான முறையில் கூட்டத்தில் நடத்த அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN