Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், கன்னிபேர் பகுதியில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆலையில் ஏற்பட்ட திடீர் அமோனியா கசிவு காரணமாக மொத்தம் 74 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த 10 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கடைசியாக, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று
(ஜூன் 25) உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமோனியா கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b