Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 25 ஜூன் (ஹி.ச.)
பின்னலாடைத் தொழிலுக்குப் பெயர் பெற்ற திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக திருமதி எஸ். ராஜேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். இதன் மூலம் மாநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அவர் இனி வழிநடத்தவுள்ளார்.
எஸ். ராஜேஸ்வரி, காவல்துறையில் சிறந்த புலனாய்வு திறன் மற்றும் சிறப்பான சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர்.
அவரது பணிக்காலத்தில் ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி இந்திய குடியரசுத் தலைவரின் விருது, தமிழக அரசின் அண்ணா பதக்கம் மற்றும் முதலமைச்சர் விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றப் புலனாய்வு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருப்பூர் மாநகரின் புதிய காவல் ஆணையராக அவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநகரில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு நட்பான காவல் சேவையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN