இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், வரும் ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர்
அதிமுக


தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், வரும் ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மகளிர் அணியின் செயல்பாடுகள், கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிப்பது, எதிர்கால அமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று மகளிர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க உள்ளார். மேலும், கட்சியின் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநில மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கட்சி அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P