பஞ்சாயத்து ராஜ் துறையில் 42 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -பவன் கல்யாண் உத்தரவு
அமராவதி , 26 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச பஞ்சாயத்து ராஜ் துறையில் 42 மண்டல பரிஷத் வளர்ச்சி அலுவலர்களுக்கு (எம்.பி.டி.ஓ.) டிவிஷனல் டெவலப்மெண்ட் அதிகாரி (டி.டி.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கு துணை முதல்-மந்திரியும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான பவ
A


அமராவதி , 26 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச பஞ்சாயத்து ராஜ் துறையில் 42 மண்டல பரிஷத் வளர்ச்சி அலுவலர்களுக்கு (எம்.பி.டி.ஓ.) டிவிஷனல் டெவலப்மெண்ட் அதிகாரி (டி.டி.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கு துணை முதல்-மந்திரியும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான பவன் கல்யாண் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கான மூப்புப் பட்டியலை துறை பதவி உயர்வு குழு (டி.பி.சி.) அங்கீகரித்துள்ள நிலையில், விரைவில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் தொடர்ந்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இத்துறையில் இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பவன் கல்யாண் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

பருவகால நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.

மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்படுவதைத் தடுத்து, குடிநீர் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA