Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
சென்னை மவுலிவாக்கம்
மவுண்ட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
பின்னர் சிறுமி வீடு திரும்பியபோது, தனது நண்பர்கள் அழைத்துச் சென்று தங்க வைத்த அறையில் போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுமி மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர்பான விசாரணையை போரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவரது நண்பர்கள் அழைத்துச் சென்று தங்க வைத்த இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற தகவல் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam