Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற
'Start Run... Stop Drugs' விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், Sports-ஐ எடு... Drugs-ஐ விடு என்ற வாசகத்தை எழுதி முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். தொடர்ந்து, போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றார்.
அதன்பின், பங்கேற்பாளர்களுக்கு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர், அவர்களுடன் சிறிது தூரம் ஓட்டத்திலும் பங்கேற்றார்.
இந்த விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்கி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைமையகங்களிலும் இதேபோன்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
Hindusthan Samachar / GOKILA arumugam