Start Run, Stop Drugs விழிப்புணர்வு ஓட்டம் - முதலமைச்சர் விஜயை பாராட்டிய நடிகை சிம்ரன்
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற “Start Run, Stop Drugs” என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் இணைந்து ஓடிய முதலமைச்சர் ஜோசப் விஜயை நடிகை சிம்ரன் எக்ஸ் த
Simran


Bb


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற “Start Run, Stop Drugs” என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் இணைந்து ஓடிய முதலமைச்சர் ஜோசப் விஜயை நடிகை சிம்ரன் எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்பு ஊக்கமளிப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “Start Run, Stop Drugs” என்ற விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்து, மக்களுடன் இணைந்து ஓடிய முதலமைச்சர் விஜயின் செயல்பாடு சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்காக முதலமைச்சர் விஜயுக்கும் அவரது குழுவினருக்கும் சிம்ரன் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ