Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 26 ஜூன் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை விநாயகர் நகரயை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தேவா (வயது 19). முத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரோகித் (வயது 20) இருவரும் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரியில் விமான நிலையம் மேலாண்மை துறை மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கல்லூரிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பசுமலையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.
வாகனத்தை ரோகித் என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது பெருங்குடி கணேசபுரம் அருகே சென்ற போது வேகமாக ஓட்டிச் சென்ற ரோகித் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் வேக கட்டுப்பாட்டு தடுப்பு தூணில் இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த தேவா என்ற மாணவன் தூக்கி வீசப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு பள்ளத்தில் விழுந்தார்.
வாகனத்தை ஓட்டி சென்ற ரோகித் மாணவனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தபோது கல்லூரிக்குச் சென்ற கொண்டிருந்த மற்ற மாணவர்கள் விபத்து குறித்து 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வழியில் தேவா உயிர் பிரிந்தது.
ரோகித் மட்டும் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிட்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து நுண்ணறிவு பொறுப்பு காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி போக்குவரத்து எஸ்ஐ வனஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J