தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்று நகை வாங்கலாமா..!
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம், நேற்று என தொடர்ச்சியாக 3 நாட்களும் அதிரடியாக சரிந்தது. ந
தங்கம்


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம், நேற்று என தொடர்ச்சியாக 3 நாட்களும் அதிரடியாக சரிந்தது.

நேற்றைய (ஜூன் 25) நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.105,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து 3வது நாளாக குறைந்த நிலையில் இன்று (ஜூன் 26) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.105,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.235க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P