முதல் டி20 -இந்தியா–அயர்லாந்து இன்று மோதல் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர்
பெல்பாஸ்ட் , 26 ஜூன் (ஹி.ச.) இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பெல்பாஸ்ட் நகரில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி
I


பெல்பாஸ்ட் , 26 ஜூன் (ஹி.ச.)

இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பெல்பாஸ்ட் நகரில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகியதைத் தொடர்ந்து, புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் இந்திய அணி முதல் முறையாக களமிறங்குவதால் இந்தப் போட்டிக்கு கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தனது திறமையை எவ்வாறு வெளிப்படுத்துவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புதிய கேப்டனின் தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்குமா, அல்லது சொந்த மண்ணில் விளையாடும் அயர்லாந்து அணி சவால் அளிக்குமா என்பது இன்றைய ஆட்டத்தின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA