Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஜூன் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நாள் உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை (UN) 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
1988-ஆம் ஆண்டு ஜூன் 26 முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பக்கத்தின் பேரழிவுகளைக் கொண்டு சேர்த்தல்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு முறையான மருத்துவ ஆதரவும், மனநல ஆலோசனைகளும் கிடைக்கச் செய்தல்.
நாடுகள் இணைந்து போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளை ஒடுக்குதல்.
போதைப்பொருள் இல்லாத உலகச் சமூகத்தை உருவாக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன.
இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் மனித சங்கிலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
விளையாட்டைத் தேர்ந்தெடுங்கள், போதையைத் தவிர்த்துங்கள் போன்ற முழக்கங்களுடன் மாரத்தான் ஓட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
போதைக்கு எதிரான உறுதிமொழிகள் பொதுமக்களாலும் மாணவர்களாலும் ஏற்கப்படுகின்றன
போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வர உதவும் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை ஊக்குவித்தல்.
Hindusthan Samachar / Durai.J