Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 26 ஜூன் (ஹி.ச.)
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், வட மத்திய ரயில்வே கான்பூர் சென்ட்ரல் – மதுரை இடையே சிறப்பு விரைவு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
ரயில் எண் 01925 கான்பூர் சென்ட்ரல் – மதுரை சிறப்பு ரயில் ஜூலை 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய புதன்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு கான்பூரில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும். மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படும்.
திரும்பும் வழியில், ரயில் எண் 01926 மதுரை – கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூலை 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய சனிக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூரை சென்றடையும். இதுவும் 5 சேவைகள் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில் போக்ராயன், ஓரை, ஜான்சி, லலித்பூர், பீனா, போபால், இடார்சி, நாக்பூர், சந்திரபூர், பல்ஹர்ஷா, சிர்பூர் காகஜ்நகர், ராமகுண்டம், வாரங்கல், கம்மம், விஜயவாடா, தெனாலி, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரையை அடையும்.
1 ஏசி 2 அடுக்கு பெட்டி, 7 ஏசி 3அடுக்கு, 8 ஸ்லீப்பர், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளிகள் அமரும் வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 27.06.2026 (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் தெற்கு ரயில்வே முன்பதிவு மையங்கள் மற்றும் ஆன்லைனில் தொடங்கும்.
Hindusthan Samachar / ANANDHAN