கேரளா மாநிலம் கொண்டோடி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறி முதல் -இளைஞர் கைது
மலப்புரம் , 26 ஜூன் (ஹி.ச.) கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோடி பகுதியில் போலீசார் நடத்திய வழக்கமான ரோந்து மற்றும் வாகன சோதனையின் போது, ரூ.25 லட்சம் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்
A


மலப்புரம் , 26 ஜூன் (ஹி.ச.)

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோடி பகுதியில் போலீசார் நடத்திய வழக்கமான ரோந்து மற்றும் வாகன சோதனையின் போது, ரூ.25 லட்சம் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு போலீசார் கொண்டோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஸ்கூட்டரில் சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் அரூர் பகுதியைச் சேர்ந்த ரதேஷ் என்பதும், அவர் போதைப்பொருள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட சோதனையில் சுமார் 780 கிராம் உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.25 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த போதைப்பொருள் யாருக்கு வழங்கப்பட இருந்தது, இதில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் என்பது குறித்து கைது செய்யப்பட்ட ரதேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA