மேற்குவங்காளத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல்
மேற்குவங்காளம் , 26 ஜூன் (ஹி.ச.) இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட தனிநபர் உரிமைகள் தொடர்பான சிவில் சட்டங்கள், அந்தந்த மதங்களைப் பின்பற்றும் மக்களின் தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ளன.
K


மேற்குவங்காளம் , 26 ஜூன் (ஹி.ச.)

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட தனிநபர் உரிமைகள் தொடர்பான சிவில் சட்டங்கள், அந்தந்த மதங்களைப் பின்பற்றும் மக்களின் தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ளன.

அதேநேரத்தில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மறுபுறம், பொதுசிவில் சட்டத்திற்கு எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்குவங்காளத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-

அனைத்து சட்ட விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு, அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களைப் போலவே மேற்குவங்காளத்திலும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கான நடவடிக்கைகள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA