போதைப்பொருள் ஒழிப்பு ஓட்டம்,டாஸ்மாக் மதுவை மறந்தது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
சென்னை, 26 ஜூன் (ஹி.ச) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்றதை பாராட்டியுள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் டாஸ்மாக் மதுபானங்கள் புற
Krishna


Nn


சென்னை, 26 ஜூன் (ஹி.ச)

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்றதை பாராட்டியுள்ள புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் டாஸ்மாக் மதுபானங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“Start Run, Stop Drugs” என்ற முழக்கம் நல்ல நோக்கத்துடன் கூடியதாக இருந்தாலும், ஒழிக்கப்பட வேண்டியது கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மட்டுமல்ல என்றும், அரசே ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் விற்பனை செய்யும் மதுபானங்களும் சமூகத்திற்கும் குடும்பங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு குறித்த அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்துவிதமான போதைப் பழக்கங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுவால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ