Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 26 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கைலம்பட்டியில் நல்லுச்சாமி (55) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மேலவளவு போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN