அமைச்சர் சரத்குமார் குறித்து வைரலான வீடியோ - போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரவிய தகவலுக்கு மறுப்பு
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், திட்டமிட்ட அவதூறு பிரச்
Nj


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை குடும்பத்தினருடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அமைச்சர் சரத்குமார் நேரில் கண்டு ரசித்தார்.

அப்போது, குழந்தைக்கு பாலில் கலந்து கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை நசுக்கிக் கொண்டிருந்ததாக அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை அருகில் இருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து, அதன் உண்மையான சூழலை மறைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவுடன் அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் சரத்குமார் கூறுகையில்,

குடும்பத்தினருடன் கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றிருந்தேன். குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்காக மாத்திரையை நசுக்கியதையே தவறாக சித்தரித்து பொய்யான பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு பொதுவெளியில் யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்களா? இது முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் முயற்சியாகும் என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை பரப்பி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பொய்யான தகவல்களை பகிர்வதையும் பரப்புவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ