ஈரோடு மாவட்டத்திலிருந்து கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக பிரிக்கும் கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 26 ஜூன் (ஹி.ச.) தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்
Sengottaiyan


ஈரோடு, 26 ஜூன் (ஹி.ச.)

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

எல்லோருக்கும் பயம் ஜோசப் விஜய் என்ற பெயர் சொன்னால் நடுங்குகிறார்கள்,நாட்டின் நலனுக்காக எம்ஜிஆர்,அம்மா, பேரறிஞர் அண்ணா வழியில் நமது முதல்வர் செயல்படுகிறார்.

தமிழகத்தில் விஜய் இருக்கும் வரை யாரும் ஆளுங்கட்சிக்கு வர முடியாது. 60 ஆண்டுகள் கட்சி எதிர்க்கட்சியாக தான் இருக்கும்.

புரட்சித்தலைவர் மற்றும் அம்மா வழியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் செயல்பட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

நாட்டின் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கோபிசெட்டிபாளையத்தில் வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்க உள்ளோம், பட்டா வழங்கத் திட்டத்தில் 7000 நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து கோபிசெட்டிபாளையத்தை தனி மாவட்டமாக பிரிக்கும் கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவிப்பேன் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN