3 நாட்கள் அரசு விடுமுறையை முன்னிட்டு பழனி கோயிலில் குவியும் பக்தர்கள்
திண்டுக்கல், 26 ஜூன் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, தொடர் 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் வந்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகப் பழனிக்குச் சாமி தரிச
Palani Murugan Temple


திண்டுக்கல், 26 ஜூன் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, தொடர் 3 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் வந்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகப் பழனிக்குச் சாமி தரிசனம் செய்யப் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கபட்டு அடிவாரம் மற்றும் கிரிவீதிகளில் மொட்டை அடித்தும், காவடிகள் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இதனால் மலைக்கோவிலுக்குச் செல்லும் படிப்பாதை மற்றும் யானைப்பாதைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்துப் பாதைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன் காரணமாகக் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், பொதுவழியில் சென்ற பக்தர்கள் சுவாமியைத் தரிசிக்கச் சுமார் 3மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து திரும்பினர்.

அதேபோல் கட்டணத் தரிசன வழியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப்கார் நிலையங்களிலும் டிக்கெட் பெறுவதற்காகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது, மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக படிப்பாதைகளில் பக்தர்களின் உடமைகள் நவீன ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யபடும் பணியிலும் ,பாதுகாப்பு பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN