Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 ஜூன் (ஹி.ச.)
என்ஏசி ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் நவீன ஆபரணப் பிராண்டான ஸ்டைலோரி, கொங்கு மண்டலத்தில் தனது வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கோவை ஆர். எஸ். புரத்தில் முதல் விற்பனை நிலையத்தை துவக்கியுள்ளது.
இது இந்நிறுவனத்தின் மூன்றாவது சில்லறை விற்பனை நிலையமாகும். புதிய கிளையை நடிகை சஞ்சனா ஏ.கே. திறந்து வைத்தார்.
ஆர். எஸ். புரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தில், சான்றளிக்கப்பட்ட 92.5 வெள்ளி ஆபரணங்கள், ஐஎஸ்ஐ சான்றளிக்கப்பட்ட ஆய்வக வைரங்கள் மற்றும் பிஐஎஸ் ஹால்மார்க் பெற்ற 9 காரட் தங்க ஆபரணங்கள் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நவீன வடிவமைப்பு, வெளிப்படையான விலை நிர்ணயம் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் சிறப்பான கொள்முதல் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டைலோரி மற்றும் நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனரும், என்ஏசி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநருமான ஆனந்த ராமானுஜம் செய்தியாளர்களிடம் கூறியதாவது....
தரம், கைவினைத்திறன் மற்றும் மதிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய சந்தையாக கோவை இருந்து வருகிறது.
ஆர். எஸ். புரம் வழியாக கொங்கு மண்டலத்தில் நுழைவது ஸ்டைலோரியின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகும். சான்றளிக்கப்பட்ட வெள்ளி, ஆய்வக வைரங்கள் மற்றும் 9 காரட் தங்க ஆபரணங்களை ஒரே இடத்தில் வழங்குவதன் மூலம், வடிவமைப்பு, தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஒருங்கிணைக்கும் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை சஞ்சனா ஏ.கே,
வெள்ளி, ஆய்வக வைரம், தங்க ஆபரணங்கள் என அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டைலோரி தயாரிப்புகள் உள்ளன.
வடிவமைப்பும், விலை நிர்ணயமும் இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன என்றார்.
இந்த நிகழ்ச்சியில்
என்ஏசி ஜுவல்லர்ஸின் தலைவர் அனந்த பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J