தெலுங்கானா மாநிலத்தில் பி ஆர் எஸ் தலைவர் கே.டி.ஆரை சந்தித்தார் - முன்னாள் எம்.எல்.ஏ பால்க சுமன்
ஹைதராபாத் , 26 ஜூன் (ஹி.ச.) சிங்கரேணி விவகாரம் தொடர்பான அநியாய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சஞ்சல்குடா சிறையில் இருந்த சென்னூர் முன்னாள் எம்எல்ஏ பால்க சுமன், ஜாமீனில் விடுதலையான பின்னர் பி.ஆர்.எஸ். கட்சியின் வொர்க்கிங் பிரசிடென்ட் கே.டி.ஆரை சந்த
A


ஹைதராபாத் , 26 ஜூன் (ஹி.ச.)

சிங்கரேணி விவகாரம் தொடர்பான அநியாய வழக்குகளில் கைது செய்யப்பட்டு சஞ்சல்குடா சிறையில் இருந்த சென்னூர் முன்னாள் எம்எல்ஏ பால்க சுமன், ஜாமீனில் விடுதலையான பின்னர் பி.ஆர்.எஸ். கட்சியின் வொர்க்கிங் பிரசிடென்ட் கே.டி.ஆரை சந்தித்தார்.

சிங்கரேணி நிறுவனத்தில் காங்கிரஸ் அரசின் ஊழல், அரசின் செயலிழப்பு மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதாலேயே தன்னை கைது செய்ததாக பால்க சுமன் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து கடந்த மாதம் 30ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், சுமார் 27 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதை அடுத்து, நேற்று மாலை அவர் சிறையிலிருந்து விடுதலையானார்.

விடுதலையான உடனடியாக அவர் கே.டி.ஆரை இன்று காலை சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA