Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 26 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் பகுதியில் வசித்துவருபவர் பால்பாண்டி
( 26). இவரது நண்பர் உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு தலைவர் காங்., கட்சியைச் சேர்ந்த தேன்மொழியின் மகன் கவிக்குமார்( 25), இருவரும் நண்பர்கள்.
அந்தப்பகுதியைச் சேர்ந்த மேலும் சில இளைஞர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது, போதை ஊசி போன்றவற்றை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.,
நேற்று மது குடிப்பதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கவிக்குமார், எப்போதும் மதுக்குடிக்கும் பால்பாண்டியை உசிலம்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று உடனிருந்த கேசவன் என்ற நபர் மூலமாக மேலும் மது வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதிக போதையில் நிலை தடுமாறியநிலையில் இருந்த பால்பாண்டி மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டுச் சென்றார்.
இரவு அந்தப்பகுதி வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது பால்பாண்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவருடன் கடைசியாக கவிக்குமார் இருந்துள்ளார் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும். உடன் இருந்த கேசவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மதுரை போலீஸ் எஸ்.பி., தேவநாதன் பார்வையிட்டு, கொலை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது
செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN