உணவுக்குப் பின் ஒரு டீஸ்பூன் சோம்பு சாப்பிடுங்க - இந்த பிரச்சனை எல்லாம் ஓடிவிடும்!
சென்னை, 26 ஜூன் (ஹி.ச.) இந்திய சமையலறையின் இன்றியமையாத அங்கமாக இருக்கும் சோம்பு அல்லது பெருஞ்சீரகம், வெறும் சுவைகாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமான கோளாறுகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்பட்டு வ
உணவுக்குப் பின் ஒரு டீஸ்பூன் சோம்பு சாப்பிடுங்க - இந்த பிரச்சனை எல்லாம் ஓடிவிடும்!


சென்னை, 26 ஜூன் (ஹி.ச.)

இந்திய சமையலறையின் இன்றியமையாத அங்கமாக இருக்கும் சோம்பு அல்லது பெருஞ்சீரகம், வெறும் சுவைகாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை.

இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் செரிமான கோளாறுகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அனெத்தோல் (Anethole), ஃபென்சோன் (Fenchone) போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன.

இந்த பெருஞ்சீரக விதைகளின் பயன்கள் ஏராளம். பல்வேறு தரப்பட்ட மக்களும் இதை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பெருஞ்சீரகமானது (Fennel) சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

பெருஞ்சீரக விதைகளில் நிறைய தாதுக்கள் உள்ளன. இப்படி ஏகப்பட்ட நன்மைகளைத் தரும் பெருஞ்சீரக விதைகளை பற்றி காண்போம்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

பெருஞ்சீரக விதைகளை மெல்லுதல் உமிழ்நீரின் நைட்ரைட்டின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இது இரத்த அழுத்த (Blood Pressure) அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஆரோக்கியமான பார்வையை பராமரிக்க தேவையான வைட்டமின் ஏ சோம்பில் நல்லளவில் உள்ளது. உணவுக்குப் பின் சோம்பை தவறாமல் உட்கொள்வது மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்ற நிலைகளிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகிறது என Indian traditional medicinal plants in ophthalmic diseases என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது: உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. பெருஞ்சீரக விதைகளில் உள்ள நறுமணச் சேர்மங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடி வாயை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: சோம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டிய வயதானதை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கூடுதலாக, பெருஞ்சீரகம் விதைகள் சருமத்தை நச்சு நீக்கி அதன் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்த உதவும்.

தேன் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

சோம்பை நன்கு அரைத்து தூள் செய்துகொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனுடன் கலக்கவும். இதை உணவுக்குப் பிறகு அல்லது செரிமானக் கோளாறு ஏற்படும்போது சாப்பிடலாம்.

தேன் ஒரு ப்ரீபயாடிக் ஆகச் செயல்பட்டு, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. சோம்பின் செரிமான நன்மைகளுடன் தேனின் குணப்படுத்தும் பண்புகள் சேரும்போது, இது கடுமையான அஜீரணம் மற்றும் வயிற்று எரிச்சலைச் சமாளிக்க உதவுகிறது. மேலும், இது அதன் இனிப்புச் சுவையால் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் இருக்கும். சோம்பை இந்த நான்கு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தொடர்ந்து உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மையை அளிக்கும்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV