இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட விருப்பம் - சீமான் அறிவிப்பு
நெல்லை, 27 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தலில் காலியாக உள்ள தொகுதிகளில் ஏதேனு
சீமான்


நெல்லை, 27 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இடைத்தேர்தலில் காலியாக உள்ள தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தாம் போட்டியிட வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பம் மட்டுமல்லாமல், பிற கட்சியினரிடமிருந்தும் அதே எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி தமக்கு ஏற்றதாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும் சீமான் கூறியுள்ளார்.

மேலும், மீதமுள்ள ஐந்து இடைத்தேர்தல் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், நான்காவது இடத்தைப் பெற்று தோல்வியடைந்தார். இருப்பினும், கட்சியின் வாக்கு வங்கி பல தொகுதிகளில் நிலைத்திருப்பதாகக் கூறி, அடுத்தடுத்த தேர்தல்களில் வலுவான முன்னேற்றத்தை நோக்கி செயல்படுவதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P