Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் 27 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 83 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன், 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஏஜென்ட் சுரேஷ் (41) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொழிற்சாலை உரிமையாளர்களான ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரையும் பெரியபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெரியபாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam