திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 81 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் - உண்டியல் காணிக்கை ரூ.3.76 கோடி
திருமலை , 27 ஜூன் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 81 ஆயிரத்து 340 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சர்வதரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று பக்தர
A


திருமலை , 27 ஜூன் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 81 ஆயிரத்து 340 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சர்வதரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 76 லட்சமாக பதிவானது. மேலும், 44 ஆயிரத்து 874 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

கோவிலில் 4 லட்சத்து 42 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதுடன், 3 லட்சத்து 31 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர்.

மருத்துவ சேவைகளை 3 ஆயிரத்து 916 பக்தர்கள் பயன்படுத்தியதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் காரணமாக வெளிப்புற வரிசை சிலாதோரணம் வரை நீண்டிருந்தது.

எஸ்.எஸ்.டி. (SSD) டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA