Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 27 ஜூன் (ஹி.ச.)
ஆந்திர மாநில தலைநகர் அமராவதி பகுதியில் ஒய்எஸ்ஆர்சிபி (YSRCP) தலைவர்கள் சென்ற பயணம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பெயர்னி நானி, அம்பதி ராம்பாபு, லெல்லா அப்பிரெட்டி உள்ளிட்டோர், அமராவதி நிலங்களை ஆய்வு செய்ய தாடேபள்ளி மண்டலத்தின் உண்டவல்லி பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டணி ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள், “Go Back YSRCP” என கோஷமிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
கருப்பு பட்டை அணிந்து நடைபெற்ற இந்த எதிர்ப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த மோதலின் போது,
ஒய்.எஸ்.ஆர்சிபி தலைவர்கள் மீது முட்டைகள் வீசப்பட்டதாகவும், லெல்லா அப்பிரெட்டி பயணித்த வாகனத்தின் மீது கற்கள் வீசப்பட்டதால் வாகனம் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் நிலைமை மேலும் பதற்றமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கி நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர்.
எனினும், போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சில போலீசார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து உண்டவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் பதற்றமான சூழல் தொடர்கிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA