Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 ஜூன் (ஹி.ச.)
இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளப் பதிவில்,
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான கே. பாக்யராஜ் அவர்களின் உடல்நலக்குறைவால் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர். எளிய, பாமர மக்களின் மனதைத் தொட்ட கதைகளின் மூலம் தனக்கென தனி இடத்தைப் பெற்ற படைப்பாளி. அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam