நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை, 27 ஜூன் (ஹி.ச.) நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டிலே நேற்று மாலை இருந்து ஒரு பரபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கி
RB Udhaykumar


மதுரை, 27 ஜூன் (ஹி.ச.)

நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக அரசு பதவிகளை அள்ளிக் கொடுக்கும் முதல்வர் விஜய்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,

தமிழ்நாட்டிலே நேற்று மாலை இருந்து ஒரு பரபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை சாராத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதியாக நியமித்து இருக்கிறது த.வெ.க அரசு.

இதற்கு முன்பாக தனக்கு ஜாதகத்தை கணித்து கூறும் ராதன் பண்டிட்டை தனது அரசின் ஆலோசகராக த.வெ.க அரசு நியமனம் செய்து, அதற்கு பிறகு கடும் விமர்சனங்கள் எழுந்ததற்கு பிறகு நியமனம் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை எல்லோரும் ஜாதகத்தை கணித்து கொடுக்கிற ராதன் பண்டிட்

தன்னுடைய ஜாதகத்தை சரியாக கணிக்க தவறினாரோ என்னவோ?

அதற்குப் பிறகு தன்னுடைய மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி, தன்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக வைத்துக்கொண்டார்.

அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக உள்ளவர்கள் முதல்வர் விஜயின் நட்புக்கு இலக்கணமாக இருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிகிறது தெரிகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்து விட்டால் ஏதோ தமிழ்நாடு தனது அப்பன் வீட்டு சொத்தாகவும், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்து விடுகிறதோ என்று நினைக்கிறாரோ?

முதல்வர் விஜய்க்கு ஐந்தாண்டுகளுக்கு தான் மக்கள் வழங்கி உள்ளார்கள். அதுவும் நீங்கள் மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு இப்படி தமிழகத்தினுடைய எட்டு கோடி மக்களின் உரிமை காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பெருமை வாய்ந்த இந்த பதவியை தன்னோடு பழகியவர்கள் என்கிற காரணத்தினாலே திரைப்படங்களில் முக்கிய ரோல் தருவதைப் போல வழங்கப்பட்டுள்ளது.

எட்டு கோடி தமிழர்களுடைய உரிமையை நிலைநாட்ட ஒரு தமிழர் கிடைக்கவில்லையா நம்ம முதல்வர் விஜய் அவர்களுக்கு ?

தமிழ்நாட்டின் உரிமையை டெல்லியில் நிலைநாட்டிய கர்நாடகாவை சேர்ந்த பிரபல சினிமா பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமித்திருக்கிறது த.வெ.க அரசு உத்தரவிட்டுள்ளது

ஒன்று புரிகிறது விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள், தன் படத்துல நடிப்பவருக்கு, மேனேஜராக இருந்தவர்களான ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, ராதன் பண்டிட், வெங்கட் நராயணா

இப்படி எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிய மாண்புமிகு முதல்வர் விஜய் நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக இருக்கின்ற பிரபல திரைப்பட கதாநாயகியாக இருக்கிற மேடம் திரிஷாவிற்கு கூட துணை முதல்வராக்க விரைவிலே அறிவிப்பு வெளிவரலாம்.

ஏனென்றால் ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். விஜய் நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிற போது நட்புக்கும் ,உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற திரைப்பட கதாநாயகியான மேடம் திரிஷா துணை முதல்வராக அறிவிக்க முதல்வர் விஜய் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பை வெளியிடலாம் என்கிற அதிர்ச்சியிலே தமிழகம் உறைந்து போயிருக்கிறது என்று கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN