Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்தார்.
அவருக்கு வயது 73.
மறைந்த பாக்யராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற உள்ளது.
நாளை மதியம் 1:30 மணி அளவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1977 முதல் 2026 வரை திரையுலகில் பணியாற்றிய பாக்யராஜ், இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களில் முத்திரை பதித்தவர்.
முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற காலத்தால் அழியாத படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
சுமார் 25 படங்களை இயக்கி, 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.
மறைந்த பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் நடிகர் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோர் உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b