இயக்குநர் கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ் (73) இன்று (ஜூன் 27) காலை திடீர் மாரடைப்பால் காலமானார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில்
பாக்கியராஜ்


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ் (73) இன்று

(ஜூன் 27) காலை திடீர் மாரடைப்பால் காலமானார்.

இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1953 ஜனவரி 7-ஆம் தேதி பிறந்த கே. பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

குடும்பக் கதைகள், நகைச்சுவை மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்', 'தாவணிக் கனவுகள்', 'இது நம்ம ஆளு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.

கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இறுதிச்சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam