திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது -9 ஆண்டுகால கூட்டணிக்கு முடிவு
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 9 ஆண்டுகளாக நீடித்த கூட்டணிக்கு முடிவு ஏற
வைகோ


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் 9 ஆண்டுகளாக நீடித்த கூட்டணிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கட்சியின் எதிர்கால தேர்தல் கூட்டணி குறித்து, “சரியான நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என பொதுக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக, திமுக கூட்டணியில் மதிமுகக்கு உரிய மரியாதை மற்றும் அரசியல் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி கட்சிக்குள் அதிகரித்து வந்தது.

மேலும், தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த முடிவு, தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது.

எதிர்காலத்தில் எந்த அணியுடன் மதிமுக இணையப் போகிறது என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam