மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்தார்- துரை வைகோ
சென்னை, 27 ஜூன் (ஹி.ச.) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா நகரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள்
மதிமுக பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ


சென்னை, 27 ஜூன் (ஹி.ச.)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா நகரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இது கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் வைகோவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த முரண்பாடுகளின் பின்னணியிலேயே துரை வைகோ இன்றைய பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ள இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் பங்கேற்காதது தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைமை தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

Hindusthan Samachar / vidya.b